நாய பாத்துகிறேன்!

ஒரு கார் பயணத்தில் முதலாளி உறங்க
ஓட்டுநர் காரை ஓட்டுகிறார்.

அப்போது ஒரு நாய் குறுக்க வர
ஓட்டுநர் சட்டென நிறுத்துகிறார்..

முதலாளி தூக்கம் கலைந்து கண் விழித்து

"ஏன் சடன் ப்ரேக் போட்ட" என்று கேட்டார்.

ஓட்டுநர் நடந்ததை கூறினார்.

முதலாளி ஓட்டுநரிடம் "எந்த நாய் குறுக்க வந்தாலும் கார் ஏத்தி கொல்லு"னு சொல்லி
விட்டு உறங்கி விட்டார்.


கொஞ்சம் நேரத்திற்கு பிறகு கார் குலுங்கி குலுங்கி சென்றது.

முதலாளி கண் விழித்து பார்க்கும் போது கார் வயல் காட்டில் சென்றது.

ஓட்டுநரிடம் "என்ன ஆச்சு" என்று வினவினார்.

"முதலாளி நம்ம வண்டி முன்னாடி ஒரு நாய் குறுக்க வந்தது. நீங்க சொன்ன மாதிரி நான் அந்த நாய கார் ஏத்தி கொல்ல பார்த்தேன். ஆனா அது கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சி. அந்த நாய் இப்ப இந்த வயக்காட்டில் தான் ஓடுது. நீங்க கவலப்படாம தூங்குங்க. அந்த நாய நான் பாத்துகிறேன்.." என்றார்.

Comments

Popular posts from this blog

Purattasi - Only Veg!

Successful Man